அமெரிக்கவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாகவும், எதிர்வரும் 28ஆம் திகதி இவர் இலங்கையை சென்றடைவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரைச் சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகின்றது.
சீனாவின் உயர்மட்ட குழுவினர் இலங்கை சென்று திரும்பியுள்ள நிலையில், அமெரிக்காவும் பலம்பொருந்திய பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்புவது இலங்கைக்கான செய்தியாக அமையலாம் என எதிர்வு கூறல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன் இணையவழி சந்திப்பை நிகழ்த்திய பின் குறிப்பாக 13ஆம் திருத்தம் குறித்து அழுத்தத்தை பிரயோகித்த பின், சீனாவின் கம்யூனிசக் கட்சியின் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான Yang Jiechi தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து தமது நெருக்கத்தை உறுதி செய்தனர். இந்த நிலையில் இவற்றின் தொடர்ச்சியாக அமெரிக்கவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.