இலங்கை பிரதான செய்திகள்

நல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் பிரதேச செயலகத்தில் பிறப்பு , இறப்பு மற்றும் விவாக சான்றிதழ் வழங்கும் சேவைகள் இரண்டு வாரத்திற்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சேவை பெற வருபவர்களை பிரதேச செயலகத்தினுள் அனுமதிக்காது அவர்களுக்கான சேவைகளுக்கான விண்ணப்பங்களை வெளியே வைத்தே உத்தியோகஸ்தர்கள் பெற்று அவற்றை வழங்கி வருகின்றனர்.


அதேவேளை பொதுமக்கள் காத்திருக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் கதிரைகள் சமூக இடைவெளியை பேணாத வகையில் நெருக்கமாக அடுக்கப்பட்டிருந்ததுடன் , பொது மக்கள். கை கழுவுவதற்கான தண்ணீர் வசதிகள் , பொதுமக்கள் நுழைய தடை செய்யப்பட்ட பகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


சமூக தொற்று இல்லை என அரசாங்கம் கூறி வரும் நிலையில் பிரதேச செயலக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் சேவைகளை பெற வரும் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். #நல்லூர் #பிரதேசசெயலக #சேவைகள் #கொரோனோ

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.