“அமெரிக்க மக்களே, உங்களால் நாம் பெருமையடைகின்றோம் வாழ்த்துக்கள்”. என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தனது ருவீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கமலா ஹரிஸிற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள அவர்,
“மன்னர்கள் பைத்தியக்காரர்களாக மாறும்போது ஜனநாயகமும் அதன் செயற்பாடுகளுமே மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே பாதுகாப்பாகும்.
குறிப்பாக ஜனநாயக நிறுவனங்கள் அவற்றின் சுதந்திரத்திற்கும், அவற்றின் சட்டப்படியான செயற்பாட்டிற்கும், ஏற்படுத்தப்படும் சகல அச்சுறுத்தல்களையும், கடுமையாக எதிர்த்துநின்று வெற்றிகொள்ள வேண்டும். அதை அமெரிக்கா நிரூபித்திருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கமலா ஹரிஸின் வெற்றி தெற்காசியப் பெண்களுக்கும் உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்குப் பெருமை தருகிறது எனவும் தனது வாழத்து செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.