எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவுக்கும் இடையே சிறப்பு சந்திப்பு ஒன்று இன்று (23.111.20) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் உலக பேரழிவான கொரோனாவின் அச்சுறுத்தல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக சஜித் பிரேமதாச தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கொரோனா கடுமையான பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் சவால்கள் குறித்தும், அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் அவர்கள் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கு பொருத்தமான தேசிய சுற்றுச்சூழல் கொள்கையை வகுப்பதன் முக்கியத்துவத்துவம் குறித்தும், உலகம் முழுவதும் நலவிவரும் காலநிலை மாற்றம் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாக சஜித் தெரிவித்துள்ளார்.
#சஜித்பிரேமதாச #சந்திரிகாபண்டாரநாயக்ககுமாரதுங்க