மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக அவர் இன்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே இவ்வாறு யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யாழ்ப்பாணம் சிறிய குருமட அதிபராவார்.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினா் தொிவித்தனா். #அருட்தந்தை #கைது #மாவீரர்கள் #இளவாலை