வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும் இலங்கையர்களின் 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைத் தொடர்ந்து நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குப் பின்னா் அவர்கள் மேலும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சிறப்பு அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று(10) வெளியிடுவார் எனவும் இ அவா் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து இசல்லும் அனைவரும் விமான நிலையத்திலேயே பி.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்கள் அல்லது விடுதிகளில் ல் தனிமைப்படுத்த அனுப்பப்படுகிறார்கள்
அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும் பி.சி.ஆர் சோதனைகளில் தொற்று உறுதியாகாவிட்டால் அவர்கள் வீட்டிற்கும் தொற்று உறுதியானால் வைத்தியசாலைகளுக்கும் அனுப்பப்படுவார்கள் .
இந்தநிலையிலேயே தொற்று உறுதியாகாதவர்கள் இனி தமது வீடுகளில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். #தனிமைப்படுத்தப்பல் #இலங்கையர்கள் #சவேந்திரசில்வா