கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் உட்பட தாதியர் ஒருவரும் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்
குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்மாந்துறையினை சேர்ந்த நபரொருவருக்கும் பொத்துவிலில் இருந்து சிகிச்சை பெற்ற நபரொருவரின் உறவினருக்கும் கொவிட் – 19 தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த நபர்களுடன் தொடர்புகொண்டிருந்த எமது வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களுக்கு இன்று (12) வியாழக்கிழமை அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இருவருக்கும் தாதியர் ஒருவருக்கும் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டனர். இதனையடுத்து கொவிட் – 19 இற்காக சிகிச்சை அளிக்கும் பாலமுனை மற்றும் மருதமுனை ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மேற்படி விடயம் தொடா்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் தொிவிக்கையில் ”எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொவிட் – 19 தொற்றாளாராக இனங்காணப்பட்ட வரை கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எமது வைத்தியசாலையில் கொவிட் – 19 தொற்றாளார்கள் இனங்காணப்பட்டதை அடுத்து புதிதாக நோயாளிகளை அனுமதிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் தொழிநுட்ப குழுவின் கூட்டம் நாளை (11) வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன” எனத் தொிவித்துள்ளாா். #அஷ்ரப்ஞாபகார்த்தவைத்தியசாலை #வைத்தியர்கள் #தாதி #கொவிட்19