
டிசம்பர் மாதம் இறுதிப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பில் தற்போதைய நிலையின் அடிப்படையில் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (12) காலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் இறுதிப்பகுதிக்குஇன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவா் அந்தவகையில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டத்தை பிறப்பிப்பிதற்கான எவ்வித எதிர்ப்பார்ப்பும் இதுவரையில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார் #டிசம்பர் #ஊரடங்குச்சட்டம் #எதிர்ப்பார்ப்பு #சவேந்திரசில்வா
Spread the love
Add Comment