200
சட்டத்துக்கு புறம்பாக மரங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று சங்குபிட்டி பூநாகரி வீதித் தடையில் நேற்று புதன்கிழமை இரவு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான வெண் சந்தனம் மற்றும் பாலை மரக்குற்றிகளுடன் இராணுவத்தின் வீதித் தடையில் நிறுத்தாமல் பயணித்த கன்டர் வாகனம் ஒன்று படையினரால் துரத்திச் செல்லப்பட்டது.
அதன்போது கடத்தல்காரர்கள் வாகனத்தை கைவிட்டு தப்பியோடியுள்ளனர் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். #வெண்சந்தன_மரங்களை #கடத்தி #வாகனம் #சங்குப்பிட்டி #மீட்பு
Spread the love