Home இலங்கைஅனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கோப்புக்களை மீண்டும் யாழ் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவு

அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கோப்புக்களை மீண்டும் யாழ் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவு

by admin

வடபகுதியிலுள்ள அரச காணிகளை வடபகுதியில் உள்ளவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே உத்தரவிட்டுள்ளாா்.

மேலும் யாழ் மாவட்ட செயலகத்திலிருந்து அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண காணி திணைக்களத்தின் கோப்புக்களை நாளைக்குள் மீண்டும் யாழ் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவா் பணித்துள்ளார்.

அத்துடன் எவ்வாறு யாழ்ப்பாணத்து மக்கள் அநுராதபுரத்திற்குச் சென்று காணி ஆவணங்கள் தொடர்பாக தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென கேள்வி எழுப்பியுள்ள அவா் சில அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள்,மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளாா்.

இன்று யாழ் மாவட்ட செயலாகத்தில் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்தில் காணி பிரச்சினைகள் தொடர்பில் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்தே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். #கோப்புக்கள் #யாழ்_மாவட்டசெயலகத்தில் #மஹிந்தானந்த #அரசகாணிகளை #வடபகுதி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More