Home இலங்கைமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்!

மதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்!

by admin

எதிர்காலத்தில் மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகவும் அது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளாா்.

ஏற்கனவே இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாகவும் அத்தகைய கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கு, கால அவகாசம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.

உயிா்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஏனைய ஆணைக்குழுக்கள், இனம் மற்றும் மதங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளின் பதிவு தொடர்பில் முன்வைத்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்தே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா். #உயிா்த்ஞாயிறு_தாக்குதல் #அரசியல்கட்சிகள் #மதம் #இனம் #தேர்தல்_ஆணைக்குழு


Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More