பிரதான செய்திகள் விளையாட்டு

இருபதுக்கு இருபது உலக கிண்ண தகுதிச்சுற்று தள்ளிவைப்பு

கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இருபதுக்கு இருபது உலக கிண்ண தகுதி சுற்று ஒக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

7-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவிலும் அதைத் தொடர்ந்து 8-வது 20 ஓவர் உலக கிண்ணப் போட்டி அடுத்த ஆண்டு (2022) அவுஸ்திரேலியாவில் நடத்தப்படவுள்ளது.

2022-ம் ஆண்டு உலக கிண்ணப் போட்டிக்கான ஆசியா ஏ மண்டலத்திற்கான தகுதி சுற்று அடுத்த மாதம் (ஏப்ரல்) 3ம்திகதி முதல் 9ம் திகதி வரை குவைத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதில் பக்ரைன், குவைத், மாலத்தீவு, கத்தார், சவுதி அரேபியா ஆகிய அணிகள் பங்கேற்க இருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தகுதி சுற்று ஒக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக ஐ.சி.சி. நேற்று அறிவித்ததுள்ளது.

இதே போல் ஆப்பிரிக்க மண்டலத்திற்கான தகுதி சுற்று ஏ, பி என்று இரு வகையாக பிரிக்கப்பட்டு தென்னாபிரிக்காவில் அடுத்த மாதம் நடத்தவிருந்த போட்டியும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திபோடப்பட்டுள்ளது. #உலக_கிண்ண #கொரோனா #ஐசிசி

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link