இலங்கை கடல்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 54 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து 05 படகுகளும் கைப்பற்றப்பட்டதுடன் அதிலிருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளாா்.
இவர்கள் மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்பிராந்தியங்களில் வைத்தே செய்யப்பட்டனர் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.
மன்னார் – பேசாலை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்த 02 படகுகளுடன் 20 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம் – காரைநகரை அண்மித்த கடற்பகுதியில் பாரிய படகொன்றில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு – சாலைக் கடற்பகுதியில் 02 படகுகளுடன் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தொிவித்த கடற்படை பேச்சாளர் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் எனவும் தொிவித்துள்ளாா்.
மேலும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவா் எனவும் அவா் தொிவித்துள்ளாா் #இந்திய_மீனவர்கள் #கைது #மன்னார் #யாழ்ப்பாணம் #முல்லைத்தீவு