Home இலங்கைநில அளவைக்கு எதிராக போராட்டம்!

நில அளவைக்கு எதிராக போராட்டம்!

by admin

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இராணுவத்தினரின் தேவைக்காக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கையை எதிர்த்து காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

குறித்த காணியில் தற்போது 52ஆவது படையணியின் தலைமையகம் அமைந்துள்ளது. குறித்த காணியை சுவீகரித்து நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்காக நில அளவை மேற்கொள்வதற்காக அளவையாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை சென்றிருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டம் காரணமாக யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை போக்குவரத்து தடைப்பட்டது.

எதிர்ப்பு போராட்டம் காரணமாக நில அளவை பணிகளை முன்னெடுக்காது நில அளவையாளர்கள் திரும்பி சென்றிருந்தனர்.

போராட்டம் முடிவடைந்த பின் ஊடகங்களுக்கு , எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து தொிவிக்கையில்,

“நிலஅளவைத் திணைக்களத்தின் செயற்பாடுகளைத் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. விரைவில் அவர்களின் அலுவலகத்தை முடக்கி போராட்டம் நடத்துவோம்.

அது மட்டுமல்லாது எமது தன்மானத்தை இழந்து வாழ நாங்கள் விரும்பவில்லை ராணுவ முகாமுக்கு முன்னால் தான் போராட்டம் நடாத்தினோம். இரானுவம் எம்மை சுட விரும்பினால் சுடலாம் எதற்கும் மானமுள்ள தமிழன் அஞ்சமாட்டான்” என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More