Home இலங்கையாழில் 7 பேருக்கு தொற்று -ஒருவர் மரணம்

யாழில் 7 பேருக்கு தொற்று -ஒருவர் மரணம்

by admin

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  சிகிச்சையளிக்கப்பட்டு வந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை எட்டாகப் பதிவாகியுள்ளது.


இதேவேளை யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 352 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன அவற்றில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நான்கு பேருக்கும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 3 பேருக்கும் கொரோனோ தொற்று இனம் காணப்பட்டுள்ளது. 


அதேவேளை கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More