Home இலங்கைவடமராட்சி மீனவர்கள் மூவரைக் காணவில்லை

வடமராட்சி மீனவர்கள் மூவரைக் காணவில்லை

by admin

கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் புதன்கிழமை படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும் நேற்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு கரை திரும்பவேண்டிய நிலையில் இரவு வரை தொடர்புகளின்றி உள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த வல்லிபுரம் பழனிவேல் (வயது-47), கதிர்காமு சோதிலிங்கம் (வயது -47) மற்றும் க.தவச்செல்வம் (வயது-40) ஆகிய மூவரையே காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள் மூவரையும் தேடி கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று காவல்துறையினா் தெரிவித்தனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More