Home உலகம்பிாித்தானியாவில் தடுப்பூசியால் கொரோனாத் தொற்று 60% குறைந்துள்ளது

பிாித்தானியாவில் தடுப்பூசியால் கொரோனாத் தொற்று 60% குறைந்துள்ளது

by admin

பிாித்தானியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பணி தொடங்கியதிலிருந்து கொரோனா தொற்று மற்றும் நோயின் தீவிரத்தன்னமை குறைந்துள்ளதாக லண்டனில் இயங்கும் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் நோய் பரவும் தன்மையை குறைத்துள்ளதுடன் தடுப்பூசி பணி செலுத்துவதன் காரணமாக நோய் பரவல் மற்றும் நோயின் தீவிரம் , மருத்துவமனைகளில் இறப்பு விகிதம் ஆகியவை பெருமளவு குறைந்துள்ளது எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 60% நோய்த்தொற்று தடுப்பூசி காரணமாக குறைந்துள்ளது எனவும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி காரணமாக பயனடைந்துள்ளனர் னெவும் குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவல் குறைந்துள்ளதன் காரணமாக பிரித்தானியாவில் அடுத்தவாரம் முதல் தளர்வுகள் அமுல்படுத்தப்பட உள்ளன.

சுமார் 13 கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் கொரோனா பரவலால் பாதிக்கப்படுள்ள நிலையில் 10 கோடிகும் மேற்பட்டோா் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More