Home உலகம் புகையிரத பாதை அருகே பெரும் தீ -பாரிஸ் RER B சேவைகள் தடை!

புகையிரத பாதை அருகே பெரும் தீ -பாரிஸ் RER B சேவைகள் தடை!

by admin

பாரிஸ் புறநகரான Aubervilliers (Seine Saint-Denis) பகுதியில் அமைந்திருந்த களஞ்சியத் தொகுதி ஒன்றில் இன்று காலை பெரும் தீ மூண்டது. இதனால் RER B புகையிரத சேவைகள் சில மணிநேரமாகத் தடைப்பட்டுள்ளன.

A86 நெடுஞ்சாலையிலும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 4ஆயிரம் சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட பாரிய களஞ்சியத்திற்கு மிகஅருகிலேயே புகையிரத பாதைகள் அமைந்துள்ளன.

இதனால் பாதுகாப்புக் கருதிசேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டன என்று போக்குவரத்து சேவை நிறுவனம்(SNCF) தெரிவித்துள்ளது.Gare du Nord – Charles-de-Gaulle 2 / Mitry ஆகிய மார்க்கங்களிலேயே சேவைகள் தடைப்பட்டுள்ளன.

தீவிபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.களஞ்சியத்தில் இருந்து கரும் புகைமண்டலம் மேலெழுவதை பலரும் படங்களாகஇணையத்தில் பகிர்ந்துள்ளனர். Seine-Saint-Denis பகுதியில் களஞ்சியங்களில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன.

——————————————————————–

குமாரதாஸன். பாரிஸ்.16-04-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More