Home உலகம்டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம்

by admin

ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் என ஜப்பான் நாட்டு ஆளும்கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அரசாங்கம் அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், டோக்கியோவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் அதிகரித்துவரும் நிலையில், ஜப்பான் நாட்டின் ஆளும்கட்சியின் தலைவர்களில் ஒருவரான டோஷிஹிரோ நிகாய் இதனைத் தொிவித்துள்ளாா்.

கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரித்து மோசமான சூழ்நிலை உருவானால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் என அவா் தெரிவித்துள்ளார்.

ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கான சமூக தொலைதூர நடவடிக்கைகள் மற்றும் பார்வையாளர்கள் மீதான கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய பணிகளை அரசாங்கம் செய்து வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக்குக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. ஆனால், இதைச் சுற்றி அதிக அளவான நிச்சயமற்ற தன்மை தற்சமயம் உருவாகியுள்ளது.

அத்துடன் கியோடோ நியூஸ், ஜப்பானியர்களிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலானோர் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க அல்லது ரத்து செய்வதற்கு ஆதரவாக இருப்பதாகக் தொிவித்துள்ளனா்

இதேவேளை டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படமாட்டாது என போட்டி அமைப்புக்குழுவின் தலைவர் ஷிகோ ஹசி மோட்டோ தெரிவித்துள்ளார்.

பல்வேறு கவலை அளிக்கும் வி‌டயங்கள் நடைபெற்றாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்வதை பற்றி சிந்திக்கவே இல்லை என அவா் தொிவித்துள்ளாா்.

கடந்த 2020 ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More