Home இலங்கைஇத்தாலியில் துப்பாக்கிச் சூடு – கொழும்பு விமான நிலையத்தில் சடலம்!

இத்தாலியில் துப்பாக்கிச் சூடு – கொழும்பு விமான நிலையத்தில் சடலம்!

by admin

துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான காயத்துடன், சடலம் ஒன்று துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

32 வயதுடைய கம்பஹா, நெதுன்கம பகுதியை சேர்ந்த குறித்த நபரின் சடலம் நேற்று (18.04.21) மாலை 4 மணியளவில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் இத்தாலி, ஏப்ரிலியா நகரில் கடமையாற்றி வந்துள்ளதாகவும், அவர் கடமையாற்றி நிறுவனத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் அவர் உயிரிழந்துள்ளதுடன் அதன் பின்னர் அவருடைய சடலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரதி காவற்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More