Home இலங்கையாழில். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மின் தகனம் செய்யப்பட்டது!

யாழில். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மின் தகனம் செய்யப்பட்டது!

by admin

யாழில்.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலங்கள் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. 
யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த 77 வயதானவர் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 


அந்நிலையில் இன்றைய தினம் காலை நல்லூர் பகுதியை சேர்ந்த 59 வயதானவரும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இவரும் யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையிலையே உயிரிழந்துள்ளார். 


இருவரின் சடலங்களும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More