சினிமா பிரதான செய்திகள்

கமலின் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி

கமலின் விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் படு பிஸியாக உள்ள நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிப் படங்களிலும் நடித்துவருகிறார்.

முக்கிய கதாபாத்தரங்களில் மட்டுமின்றி வில்லன், துணைக் கதாபாத்திரம் என அனைத்து வேடங்களிலும் அவா் நடித்து வருகிறார்.

அவரது இயல்பான நடிப்புக்காக ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளநிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கி கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை படக்குழு அணுகியதாகவும் ஏற்கனவே கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ள விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை எனவும் தொிவிக்கப்படுகின்றது.

.அதே நேரத்தில், விஜய் சேதுபதி இந்த பெரிய வாய்ப்பை இழக்க விரும்பவில்லை எனவும் அதனால் அவா் அவர் தனது ஷெட்யூலில் ஒரு மாற்றத்தை செய்ய விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

எனினும் அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து பெரும் பாராட்டை பெற்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link