Home இலங்கையாழில் நள்ளிரவுகளில் கொள்ளையிடும் கும்பல் கைது

யாழில் நள்ளிரவுகளில் கொள்ளையிடும் கும்பல் கைது

by admin

யாழ்ப்பாணத்தில் வயோதிபர் வசிக்கும் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பிரதான சந்தேக நபர் நல்லூர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என காவல்துறையினா் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 18பவுண் நகைகள், காசு மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

 சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கியை விற்றமை மற்றும் அடகு பிடித்தமை போன்ற குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

அவர்களிடம் காவல்துறையினா் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவினர்  முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. 

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பூசகர் ஒருவரின் வீட்டுக்குள் சமையல் அறை புகைக் கூண்டு ஊடாக நுழைந்த கொள்ளையர்கள் வாள்களைக் காண்பித்து மிரட்டி நகைகள் மற்றும் பணம் கொள்ளையிட்டுத் தப்பித்தனர். 

அந்த கொள்ளை உள்பட கந்தரோடை, நல்லூர், கந்தர்மடம் என நான்கு இடங்களில் முதியவர்களை மிரட்டி கொள்ளையிட்ட கும்பலின் பிரதான சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். 

சந்தே நபர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் முற்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தப்படுப்பு காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்ஸ்ஸின் வழிகாட்டலில் உப காவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான அணி இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More