பிரதான செய்திகள் விளையாட்டு

69 ஓட்டங்களால் சென்னை வெற்றி

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினை வென்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீா்மானித்து நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களின் முடிவில்  4 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 192 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி  20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தமையினால் சென்னை 69 ஓட்டங்கள் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link