Home இலங்கைநாச்சிமார் அம்மன் தலைவர் -செயலாளர் பிணையில் விடுவிப்பு : நாளை வழக்கு

நாச்சிமார் அம்மன் தலைவர் -செயலாளர் பிணையில் விடுவிப்பு : நாளை வழக்கு

by admin

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள், ஆலயத்தில் கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த்திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் நேற்று  செவ்வாய்க்கிழமை இரவு காவல்துறைப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டில் கொவிட்-19 கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத் திருவிழாவை நடத்தியதன் மூலம் யாழ்ப்பாணத்தில்
கொரோனா வைரஸ் பரவலை ஏற்படுத்த வழிசமைத்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய தலைவர், செயலாளர் ஆகியோர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர். 


கைது செய்யப்பட்ட இருவரிடமும் வாக்கு மூலம் பெற்ற பின்னர் அவர்களை காவல்துறையினர் , காவல்துறைப் பிணையில் விடுவித்துள்ளனர். 


யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நாளை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவுள்ளது.
அதனால் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு காவல்துறைப்பிணை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா  கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அந்தக் காணொலி காட்சி தென்னிலங்கை தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டதன் அடிப்படையில் யாழ்ப்பாணம்
தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறைப்பரிசோதகர் பிரசாத் பெனான்டோவின் பணிப்பில்
 இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய 50 பக்தர்களுக்கு மட்டுமே ஆலயத்தில் ஒரே நேரத்தில் வழிபட அனுமதிக்கப்படும் என சுகாதார அமைச்சின் சுற்றறிக்கை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More