Home பிரதான செய்திகள் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி – மீண்டும் முதலிடம்

ஒரு ஓட்ட வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி – மீண்டும் முதலிடம்

by admin

அகமதாபாத்தில் நேற்று (ஏப்ரல் 27) இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22 வது லீக் போட்டியில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் டெல்லி அணியை பெங்களூரு அணி வென்றுள்ளது

டெல்லி அணியிலிருந்து அஷ்வின் விலகிவிட்டதால் அவருக்குப் பதிலாக இஷாந்த் ஷர்மாவும் பெங்களூரு அணியில் நவ்தீப் சைனி, டேன் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு ரஜத் படிதர், டேனியல் சாம்ஸ் ஆகியோரும் இடம் பெற்றனர்.

நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி அணி களத்தடுபிபனை தொிவு செய்த நிலையில் மதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 172 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கி டெல்லி அணி இறுதியில், 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து 1 ஓட்டத்தினால் தோல்யடைந்தது.

இது பெங்களூரு அணிக்கு ஐந்தாவது வெற்றி எனும் நிலையில் அந்த அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

இன்று நடைபெறவுள்ள 23ஆவது லீக் போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் போட்டியிடவுள்ளன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More