பிரதான செய்திகள் விளையாட்டு

டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது

நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பினை தொிவு செய்ததனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து, 155 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 16.3 ஓவரில் 156 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. இது டெல்லி அணி பெற்ற 5வது வெற்றி என்பதுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பிடித்துள்ளது.

அதேவேளை இன்றையதினம் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் அணியினை மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link