பிரதான செய்திகள் விளையாட்டு

டெல்லி -ராஜஸ்தான் அணிகள் வெற்றி

நேற்றையதினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் 29ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை அணியினை வென்ற டெல்லி கப்பிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது

நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ‘ பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் ப 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 166 ஓட்டங்களைசேர்த்தது.

இதனையடுத்து 167 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எ வெற்றி பெற்றது.

8ஆவது லீக் போட்டிகளில் விளையாடிய டெல்லி அணிக்கு இது ஆறாவது வெற்றியாகும் என்பதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. பஞ்சாப் அணிக்கு ஐந்தாவது தோல்வியாகும்.

அதேவேளை நேற்றையதினம் முன்னதாக அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வென்றுள்ளது.

இன்று அகமதாபாத்தில் நடைபெறும் 30ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா – பெங்களூரு அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link