இலங்கை பிரதான செய்திகள்

தேசிய ரீதியில் வடக்கு கிழக்கு மாணவர்கள் இருவர் முதலிடத்தில்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவனான தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்

அதேபோன்று , விஞ்ஞானப் பிரிவில், மட்டக்களப்பு, பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மகிழுரைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் முதலிடம் பெற்றுள்ளார்

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக சுகாதார வழிகாட்டல்களுக்கமைய 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்றது.

இதில் 2 ஆயிரத்து 648 பரீட்சை மத்திய நிலையங்களில் மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 824 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனா்

மேலும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link