ஐ.பி.எல். போட்டியை பாதியிலேயே ஒத்திவைத்ததால், கிரிக்கெட் வாரியத்துக்கு 2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எஞ்சிய போட்டிகளை செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
பல விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து கிரிக்கெட் வாரியமும், ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழுவும் முடிவு செய்து ஐ.பி.எல். போட்டியை காலவரையின்றி ஒத்திவைத்தன.
ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 60 போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் இதுவரை 29 போட்டிகள் நடந்துள்ளது. நேரடி ஒளிபரப்புக்கு போட்டி ஒன்றுக்கு 4.4 கோடி ரூபாவினை ஸ்டார் நிறுவனம் கொடுக்கிறது.
தற்போது பாதியில் ரத்து செய்யப்பட்டதால் 31 ஆட்டங்களுக்கான பணத்தில் 1,700 கோடி ரூபாவுட்பட ஏனைய விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயையும் சோ்த்து 2 ஆயிரம் கோடி ரூபா வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையிழல் பாதியில் ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை செப்டம்பர் மாதத்தில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. ஐ.பி.எல். போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதால், உலக கோப்பை நடைபெறுவதும் சந்தேகமே.
மேலும் நவம்பர் மாதம் இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே.
ஐக்கிய அரபு எமிரேட்சில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.