இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குருதி வழங்க முன் வருபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

குருதி வழங்க விரும்புபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் அல்லது   023-2222261,மற்றும்    023-2222349 என்ற தொலைபேசி  இலக்கங்களுடன்   தொடர்பை ஏற்படுத்தி குருதி வழங்கி வைக்க முடியும் என மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா மேலும் தெரிவித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.