Home உலகம் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் – 133 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் – 133 பேர் உயிரிழப்பு

by admin

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையே கடந்த திங்கட்கிழமை முதல் கடுமையான மோதல் நிலவி வருகின்ற நிலையில் இதுவரை மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது

அதில் காசா முனையில் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உட்பட 126 பேரும், இஸ்ரேலில் 7 பேரும் உயிரிழந்துள்ளனா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ள காசாமுனை பகுதியை ஆட்சி செய்து வருகின்ற ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ரொக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவதும் அதற்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுத்து வருவதும் நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்திருந்தனர்.

பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ரொக்கெட் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதனையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியதுடன் இரு தரப்பும் மாறிமாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்நிலையிலேயே இரு தரப்பு மோதலில் இதுவரை மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அதில் காசா முனையில் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட 126 பேரும், இஸ்ரேலில் 7 பேரும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காசா முனை மீது தாக்குதல் நடத்த விமானப்படையுடன் தரைப்படையையும் இணைத்து இஸ்ரேல் களமிறக்கியுள்ளதனால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளதனையடுத்து காசா முனையில் வசித்து வந்த பாலஸ்தீனர்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More