இலங்கை பிரதான செய்திகள்

காவல்துறைமா அதிபர் மனித கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு

இலங்கையின் காவல்துறை மாஅதிபர் ஒரு படுகொலைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, காவல்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் காவல்துறைக் காவலில் இருந்த தாரக தர்மகீர்த்தி விஜேசேகர அல்லது கொஸ்கொட தாரகவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக, காவல்துறைமாஅதிபருக்கு, எழுத்து மூலம் அறிவுறுத்தியிருந்த நிலையில், சந்தேகநபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

முன்னதாக, காவல்துறைக் காவலில் இருந்த மெலோன் மாபுலா அல்லது ‘உரு ஜுவா’ கொல்லப்பட்டார். இந்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்திற்கு வெளியே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் மரண  தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  தனது மகனை, விசாரணை எனும் பெயரில் வெளியே அழைத்து சென்று கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி  வெலே சுதாவின் தாய் ஆர். ஜி. மாலனி ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதனடிப்படையில், வெலே சுதாவை  சிறைச்சாலைக்கு வெளியில் அழைத்துச் செல்வதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாரக தர்மகீர்த்தி விஜேசேகரவின் உயிர்ப்பாதுகாப்பு குறித்து எச்சரித்த போதிலும், காவல்துறை மாஅதிபர் ஏன் தனது உத்தியோகபூர்வ அதிகாரத்திற்கு ஏற்ப செயற்படவில்லை என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

“படுகொலை செய்யப்பட்ட சந்தேகநபரின் உயிர் ஆபத்து குறித்து பல மணிநேரங்களுக்கு முன்னர் தகவல் வழங்கப்பட்ட போதிலும், இது குறித்து விசாரணை செய்யவோ அல்லது மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவோ, காவல்துறை மா தனது உத்தியோகபூர்வ அதிகாரத்திற்கு அமைய ஏன் செயற்படவில்லை என்பது சிக்கலான விடயம்.  இதற்கமைய இந்த கொலைக்கு அவரது உதவி மற்றும் ஒத்துழைப்பு கிடைத்துள்ளமை சாதாரணமாகவே வெளிப்படுகின்றது,”

காவல்துறைமா அதிபர் இவ்வாறு தனது பொறுப்பினைத் துறந்து அவர்  செயற்படுவாராயின், அது இலங்கை காவல்துறையினர் தொடர்பாக குடிமக்களிடையே கடுமையான அவநம்பிக்கையை உருவாக்கும் எனவும், இதன் விளைவாக குடிமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாக்குவதாகவே அமைந்துள்ளதாகவும் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மா அதிபரின் அலட்சியம் குறித்து விசாரணை நடத்துமாறு தேசிய காவல்துறை ஆணைக்குழுவை சேனக செனக பெரேரா கோரியுள்ளார்.

“காவல்துறை மா அதிபரின் அலட்சியம் குறித்து விரைவாக விசாரணை நடத்தவும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”

தாரக பெரேரா விஜேசேகர தகுற்றவியல் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்து திடீரென பேலியகொடவில் உள்ள ஒரு சிறப்பு காவல்துறைபிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும், அவர் காவலில் கொல்லப்படுவார் என அவர் அஞ்சுவதாகவும் கடந்த 12ஆம் திகதி, தாரக பெரேரா விஜசேகரவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.

காவல்துறைமா அதிபரின் கீழ் செயற்படும் குற்றப்புலனாய்வு பிரிவு, பேலியகொட காவல்நிலையத்தின் விசேட குற்ற விசாரணைப் பிரிவிலும், அவரது உயிருக்கு காணப்படும் அச்சுறுத்தல் குறித்து சட்டத்தரணி அறிவுறுத்தியிருந்தார்.

எனினும், அதே இரவில் மீரிகம பகுதியில் சந்தேகநபர் கொல்லப்பட்டார்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது சந்தேநபர் காவல்துறையினரைத் தாக்க முற்பட்டபோது,  காவல்துறையினா் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக பினனர் காவல்துறையினா்அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்திருந்தனர்.

தாரகவின் உயிர் அச்சுறுத்தல் குறித்து காவல்துறை மாஅதிபருக்கு சட்டத்தரணி அனோஜ் ஹெட்டியாரச்சி அனுப்பிய கடிதத்தின் நகலையும், சட்டத்தரணி சேனக பெரேரா தேசிய காவல்துறை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது காவல்துறையினா் , விசாரணை எனும் பெயரில்  சந்தேகநபர்களை வெளியே அழைத்து சென்று கொலை செய்யும் நிலை ஒன்றினை அவதானிக்க முடிவதாகவும், அந்த நிலைமை தனது மகனுக்கும் ஏற்படுமோ என மனுதாரர் அஞ்சுவதாக  ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா சூட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மனு மீதான பரிசீலனைகளை எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானித்த நீதிமன்றம், அது வரை வெலே சுதாவை பூசா சிறைக்கு வெளியே அழைத்து செல்லக் கூடாது என பூசா சிறைச்சாலையின் அத்தியட்சருக்கு கட்டளையிட்டது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.