Home இலங்கையாழ்.போதனாவில் அலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது

யாழ்.போதனாவில் அலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது

by admin

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்களின் அலைபேசிகளைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய், சுதுமலையைச் சேர்ந்த 22,24 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களின் அலைபேசிகள் திருட்டுப் போவதாக யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் இன்று அவர்களது வீடுகளில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் திருடப்பட்ட 7 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் சில அலைபேசிகள் தொடர்பில் தகவல் இல்லை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையின் போது, மருத்துவர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் தமது அலைபேசிகளை சார்ஜ் செய்ய வைக்கும் போது சந்தேக நபர்கள் இருவரும் நூதமாகத் திருடி வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More