Home இலங்கைகொழும்பில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு – தீயை அணைக்க முயற்சி!

கொழும்பில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு – தீயை அணைக்க முயற்சி!

by admin

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் கப்பலில் இருந்த 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கப்பலில் இருந்து 25 கப்பல் ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் இந்தியர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதற்காக வானூர்த்தி ஊடாக இராசயன பொருட்கள் தூவப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More