Home இலங்கைபயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்பது உண்மைக்கு புறம்பானது

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்பது உண்மைக்கு புறம்பானது

by admin

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என பரவுகின்ற தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என விசேட ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர்களூடாக நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் பாதுகாப்பு தொடர்பில் நான்காம் நிலை தரத்தின் கீழ் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமை பொதுவான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More