Home பிரதான செய்திகள்மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்

by admin

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ,காணொலி வாயிலாக நேற்று (மே 29) நடைபெற்றது.

இதன்போது இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது

இதனையடுத்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு நோ்காணல் வழங்கிய பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்பதகை உறுதிபடுத்தியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வந்த 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று காரணமாக க காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 29 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 போட்டிகள் மீதமுள்ளன.

எனினும் மீதமுள்ள ஐபிஎல் தொடரில் முன்னைய போட்டிகளில் விளையாடிய வீரர்கள் அனைவரும் இடம்பெறுவார்களா என்பது சந்தேகம் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More