Home இலங்கையாழில். குளவிக் கொட்டுக்கு இலக்கனான மூவர் மயக்கம்!

யாழில். குளவிக் கொட்டுக்கு இலக்கனான மூவர் மயக்கம்!

by admin

யாழில். ஆலயத்தில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த மூவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். நாவற்குழி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இன்றைய தினம் சிரமதான பணியில் சிலர் ஈடுபட்டிருந்த போது , குளவிக் கூடு கலைந்து சிரமதான பணியில் ஈடுபட்டிருந்தவர்களை துரத்தி கொட்டியது.

அதில் குளவி கொட்டுக்கு மூவர் மயக்கமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More