Home இந்தியாதமிழகத்தில் மே மாதத்தில் மட்டும் 10,186 போ் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் மே மாதத்தில் மட்டும் 10,186 போ் கொரோனாவுக்கு பலி

by admin

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 24,232 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மே மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையால் இந்தியா முழுவதும் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை மே மாத தொடக்கம் முதலே இரண்டாம் அலையின் தாக்கம் அதிகாித்துக் காணப்படுகின்றது.


கடந்தாண்டு முதல் இல்லாத அளவிற்கு ஒருமாத உயிரிழப்பு மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த மாதம் வரை 14,046 பேர் பலியான நிலையில், மே மாதத்தில் 10,186 பேர் பலியானதையடுத்து மொத்த பலியின் எண்ணிக்கை 24,232 அதிகரித்துள்ளது. மே மாதம் மட்டும் 10,186 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் 42 சதவீதம் பேர் கடந்த மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More