156
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேய அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.
ரணில் விக்ரமசிங்கவின் பெயர் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் இன்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love