வல்வைப் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது,
வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கதின் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
அதன் போது வல்வெட்டித்துறை பகுதியில் 1989ம் ஆண்டு இதே நாளில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 63 பொது மக்களையும் நினைவு கூரப்பட்டது.
1989 ம் ஆண்டு 08 ம் மாதம் 02 ம் திகதி வல்வெட்டித்துறையில் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையில் நடந்த மோதலில் மோதலில். 09 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்தனர்.
அதனை அடுத்து, 2 ம், 3 ம், 4 ம் திகதிகளில் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் பொதுமக்களை வகைதொகையின்றி படுகொலை செய்தனர்.
குறித்த திகதிகளில் 63 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 100 க்கு மேற்பட்ட மக்கள் படுகாயங்களுக்கு உள்ளானார்கள். அப்பகுதி மக்களின் 123 வீடு முற்றாக எரித்து சாம்பல் ஆக்கப்பட்டன. 45 கடைகள் முற்றாக சூறையாடப்பட்டன. 175 மீன் பிடி வள்ளங்கள் முற்றாக எரித்தழிக்கப்பட்டன.
அன்றைய தினங்களில் இந்திய இராணுவத்தினரின் படுகொலைகளினால் முழு வல்வெட்டித்துறையும் சுடுகாடாகியது.