இலங்கையில் நாளை (16.08.09) முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஊரடங்கு வேளையில் அத்தியாவசிய சேவைகளுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.