புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இன்று(19) முதல் வீட்டிலிருந்து ஒருவா் மாத்திரமே வௌியில் செல்ல முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும், தொழிலுக்கு செல்பவர்கள் வழமை போல செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்..
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நேற்று (18) வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது