இலங்கை பிரதான செய்திகள்

மருத்துவபீட மாணவனின் மர்ம மரணம்: முன்னதாகவே தகவல் வெளியானது எப்படி?


2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் உயிரிழந்தமை தொடர்பில், முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு, காவற்துறை மா அதிபருக்கு பிரதமர் அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.


துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் என்ற, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மருத்துவ பீட மாணவவர், 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று, மர்மமான முறையில் தூக்கில் தொங்க விடப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் தங்கியிருந்து கல்வி கற்ற கோண்டாவில் கிழக்கு – வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இவரது இந்த மரணம் தொடர்பில் காவற்துறையினர் தற்கொலை எனும் ரீதியில் விசாரணைகளை கிடப்பில் போட்டு இருந்தனர்.


இச்சம்பவத்தில், குறித்த மாணவன் உயிரிழந்தமை தெரியவருவதற்கு இரண்டரை மணித்தியாலங்களுக்கு முன்பதாக, அவர் மரணமடைந்தமை தொடர்பிலான தகவல் வெளியிடப்பட்டிருந்தது.


இது தொடர்பில் காவற்துறையினருக்கு தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


இதனை தொடர்ந்து, குறித்த மாணவன் உயிரிழந்த விடயம் தெரியவருவதற்கு முன்பாக உயிரிழந்தமை தொடர்பில் தகவல் வெளியானமை தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு, காவற்துறை மா அதிபருக்கு, பிரதமர் அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.