Home சினிமா ஷாருக்கானின் மகன் கைது

ஷாருக்கானின் மகன் கைது

by admin

போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும்போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளில் பொலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உட்பட  13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்

மும்பையில் இருந்து கோவாவிற்கு சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகின்ற கப்பல் ஒன்றில் போதை பாா்ட்டி நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல அதிகாரிகள் அந்த சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போன்று பயணம் செய்தனர்.


கப்பல் மும்பையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் ஆரம்பமான பார்ட்டியில் கஞ்சா, கோகைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தியமை தெரியவந்ததை அடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப்பொருள் பயன்படுத்தியமை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உள்பட  13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்களிடம் 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து ஆரியன் கான் உள்பட 3 பேரை மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறையினா் அழைத்து சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More