பாசிக்குடா சுற்றுலா விடுதி நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. ஆறு வயதுடைய சியாம் செய்னப் எனும் சிறுமியே இவ்வாறு உயிாிழந்துள்ளாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
கண்டி – ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அங்கு தங்கியிருந்த குடும்பத்தினாின் பிள்ளைகள் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த போது குறித்த சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக காவல்துறையினாின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடா்பில் , மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.