346
யாழ்.கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டுக்குழு சந்தேக நபரின் வீட்டில் இருந்து இரண்டு வாள்களை மீட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரின் வீட்டில் வாள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாககாவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்களின் அடிப்படையில் குறித்த வீட்டினை காவல்துறையினர் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.
அதன் போது வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 18 வயதான சந்தேக நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Spread the love