மன்னார் அரிப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலை பொருட்களை வினியோகித்து விட்டு மீண்டும் வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் அரிப்பு பகுதியில் வைத்து நேற்று இரவு திடீரென தீப்பற்றி உள்ளது.
-இதன் காரணமாக குறித்த பட்டா ரக வாகனம் முழுமையாக எரிந்துள்ளதோடு,பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது. எனினும் குறித்த வாகனத்தில் பயணித்த இருவர் எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளனர். மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.