Home பிரதான செய்திகள் மேற்கிந்தியத் தீவுகளை வென்ற இலங்கை

மேற்கிந்தியத் தீவுகளை வென்ற இலங்கை

by admin

அபுதாபியில் நேற்று நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியினை இலங்கை அணி 20 ஓட்டங்களால்  வென்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடியில் 3 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

இதனையடுத்து 190 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டதனால் இலங்கை அணி 20 ஓட்டங்களால்  வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய, சூப்பர் 12 சுற்றில் கலந்து கொண்ட 5 போட்டிகளில் 2 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More