கேகாலை − ரம்புக்கன்ன உடகலதெனிய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாயும்,8 மற்றும் 14 வயதான அவரது இரு மகள்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தந்தை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மற்றுமொரு மண்சரிவில் தாதி மரணம்!

குருநாகல் − நாரம்மல − வென்னோருவ பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் 23 வயதான யுவதி மரணமடைந்துள்ளார்.
வீட்டிலிருந்த தாய், மகன் ஆகிய இருவரும் தப்பியுள்ளனர். மண்சரிவுக்குள் சிக்கி காயமடைந்த மகள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
Spread the love
Add Comment